இந்தியா ஆஸ்திரேலியா இருதரப்பு உச்சி மாநாட்டில் பல்வேறு துறைகளில் 1500 கோடி ரூபாய் முதலீட்டினை செய்யவுள்ளது.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தரப்பில், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இம்மாத இறுதிக்குள் ஒரு விரிவான ஒப்பந்தத்திற்கு முன் வரைவு ஒப்பந்தம் செய்து கொள்ளும்.
சில பொருட்களின் மீதான கட்டணங்களை தாராளமயமாக்குவதை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் அமையவுள்ளது.
அரசு நிலம், கட்டிடங்களை பணமாக்க புதிய நிறுவனம்.. மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒப்புதல்..!
ஆஸ்திரேலியாவின் சிறப்பு
குறிப்பாக இவ்விரு நாடுகளும் முக்கியமான கனிமங்கள் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன. இன்றைய காலகட்டத்தில் உலகின் மிகப்பெரிய லித்தியம் இருப்புகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா இருந்து வருகிறது. மேலும் சுத்தமான உலோக நிலக்கரியை கொண்ட ஒரு நாடாகவும் உள்ளது. ஆக இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கு உலோக நிலக்கரி மற்றும் லித்தியம் கிடைக்க எளிதில் வாய்ப்பு கிடைக்கும்.
இந்தியாவுக்கு பேரூதவியாக இருக்கும்
இதன் மூலம் இந்தியாவின் மின்சார வாகனத் துறைக்கு மிகப் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு நிலக்கரி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு தேவையான நிலக்கரியும் கிடைக்க வழி கிடைக்கும்.
வர்த்தகம் மேம்படும்
இதற்கிடையில் நாளை நடக்கவிருக்கும் மாநாட்டில் வர்த்தகம், கனிமங்கள், இடம் பெயர்வு, ஆற்றல், கல்வி ஆகியவற்றில் மிக நெருக்கமாக செயல்பட உள்ளதாகவும் தெரிகிறது. மொத்தத்தில் இரு நாட்டின் வர்த்தக மேம்பாட்டினைஒ மேம்படுத்த இந்த மாநாடு உதவிகரமாக அமையும்.
பல்வேறு துறைகளில் வளர்ச்சி மேம்படும்
இந்த மாநாட்டுக்கு பின், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாடு புதிய முயற்சிகளுக்கு வழி வகுக்கும், இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் வளர்ச்சி மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Australia expected to announce Rs.1500 crore investment in india
Australia expected to announce Rs.1500 crore investment in india/இந்தியாவில் குவியும் முதலீடுகள்.. ஜப்பானை தொடர்ந்து ஆஸ்திரேலியா அதிரடி..!