இலங்கையில் ஏற்பட்டுள்ள காகித பற்றாக்குறையால் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பொருளாதார மந்த நிலை, அண்ணியச் செலவாணி வீழ்ச்சி, ஏற்றுமதி, இறக்குமதி சுற்றுலா துறைகள் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
நிதி பற்றாக்குறையால் காகிதத் தயாரிப்பு, வினாத் தாள் அச்சடிப்புக்கு தேவையான பொருட்கள், மை உள்ளிட்டவைகள் இறக்குமதி தடைபட்டுள்ளன.
காகித பற்றாக்குறை காரணமாக பள்ளிகளில் நடக்க இருந்த பருவத் தேர்வுகள் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன.
பள்ளிகளில் அடுத்த நிலைக்கு மாணவர்கள் செல்ல பருவத் தேர்வு முடிவுகள் கணக்கிடப்படுவதால் ஏறத்தாழ 40 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.