ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதினின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்வின், எனது 24 வயது மகளின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை நியாயமற்றது என தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய போரை எதிர்த்து ரஷ்யா மீதும் அந்த நாட்டின் முக்கிய நபர்களின் மீதும் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சொத்துக்கள் முடக்க தடைகளை மேற்கத்திய நாடுகள் பலவும் அறிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் ரஷ்ய ஜனாதிபதி புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அவரது மனைவி, மற்றும் 24 வயதுடைய லிசா பெஸ்கோவ் ஆகியோர் மீதும் அமெரிக்காவின் பொருளாதார தடைகள் பாய்ந்துள்ளன.
The daughter of #Putin‘s press secretary Dmitry #Peskov about the sanctions against her:
“It seems to me completely unfair and unreasonable. I was very surprised, because it is strange to impose sanctions on a person who is 24 years old and has nothing to do with the situation”. pic.twitter.com/Rz5CB9VNTB— NEXTA (@nexta_tv) March 20, 2022
இந்தநிலையில் தனது 24 வயதே உடைய மகள் லிசா பெஸ்கோவ் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை மற்றும் சொத்து முடக்க நடவடிக்கையானது முற்றிலும் நியாயமற்றது என ரஷ்ய ஜனாதிபதி புதினின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் லிசா பெஸ்கோவ், உக்ரைனின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய அன்று “போர் வேண்டாம்” “no to war” என்ற கருத்தை தெரிவித்து இருந்தார், அதன்பின் அந்த கருத்து சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.