மாஸ்கோ,
உக்ரைன் மீது ரஷியா இன்று 25-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.
இதனால், உக்ரைன் – ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன.
இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நேற்று அதிநவீன ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. உக்ரைன் ராணுவ தளங்களை ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததாக ரஷியா தெரிவித்திருந்தது.
இந்நிலையில், போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் உக்ரைன் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை கொண்டு ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனின் மைஹொலெவ் மாகாணம் கொஸ்ட்யன்நிவ்கா என்ற பகுதியில் குடியிருப்பு பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ள உக்ரைன் ராணுவத்திற்கு எரிபொருள் சேமிப்பு கிடங்கை குறிவைத்து அதிநவீன ஹின்ஷல் என்ற ஹைப்பர் சோனிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.