உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஐ.நா., ஆதரவு பெற்ற அமைப்பு ஒன்று, கடந்த 10 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. உலக மகிழ்ச்சி அறிக்கை 2011ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்படுகிறது.
இந்த பட்டியல், மக்களை நேரடியாக சந்திப்பதன் வாயிலாகவும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக புள்ளி விபரங்கள் அடிப்படையிலும் மதிப்பெண் வழங்கப்பட்டு தயார் செய்யப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் போருக்கு முன்னதாக எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தற்போதைய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் வட ஐரோப்பிய நாடான
பின்லாந்து
உலகின் மகிழ்ச்சியான நாடாக முதலிடம் வகிக்கிறது. பின்லாந்து தொடர்ந்து 5ஆவது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறது. டென்மார்க் 2ஆம் இடம், ஐஸ்லாந்து 3ஆம் இடம், சுவிட்சர்லாந்து 4ஆம் இடம் மற்றும் நெதர்லாந்து 5ஆம் இடமும் பெற்றுள்ளன. அமெரிக்காவுக்கு 16ஆவது இடம் கிடைத்துள்ளது. கொரோனா தொற்று உச்சத்திலிருந்த போது அதாவது 2020ஆம் ஆண்டில் அமெரிக்கா மகிழ்ச்சி குறியீட்டில் பின் தங்கியிருந்த நிலையில் தற்போது 19ஆவது இடத்திலிருந்து 16ஆவது இடத்துக்கு உயர்ந்துள்ளது.
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 136ஆவது இடம் கிடைத்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில் 139ஆவது இடத்திலிருந்த
இந்தியா
, தற்போது 3 இடங்கள் உயர்ந்து 136ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த நிலையில்,
உலகின் மகிழ்ச்சியான நாடுகள்
பட்டியலில் இந்தியாவுக்கு 136ஆவது இடம் கிடைத்துள்ளது தொடர்பாக மத்திய அரசை
ராகுல் காந்தி
விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “பசி தரவரிசை: 101, சுதந்திர தரவரிசை: 119, மகிழ்ச்சி தரவரிசை: 136… ஆனால், வெறுப்பு மற்றும் கோபத்திற்கான தரவரிசையில் விரைவில் முதலிடத்தைப் பெறுவோம்!” என்று பதிவிட்டுள்ளார்.