பொலன்னறுவை பகுதியில் எரிபொருள் வாங்க வரிசையில் பொதுமக்கள் நின்றபோது அங்கு சவப்பெட்டி ஒன்றுடன் வந்த வானினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் தற்போது நீண்ட வரிசைகளில் பொதுமக்கள் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுச் செல்கின்றனர்.
சில இடங்களில், மக்கள் இரவு வரை தங்கள் முறைக்காக காத்திருக்க வேண்டியியுள்ளது.
இவ்வாறான நிலையில், தனியார் மலர்ச்சாலை ஒன்றிற்கு சொந்தமான வான் ஒன்று திடீரென பொலன்னறுவையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளைப் பெற்றுச் செல்வதற்காக வந்தமையினால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்த வானிற்குள் சவப்பெட்டி ஒன்றும் காணப்பட்ட நிலையில், குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைக்க செல்லும்போது எரிபொருள் முடிந்தமையினால் தான் மிகவும் நெருக்கடியான நிலைமைக்கு உள்ளாகியதாக சாரதி குறிப்பிட்டுள்ளார்.
சடலத்தை கொண்டு செல்லவுள்ளேன். இறுதி அஞ்சலிக்கு சடலத்தை தயார் செய்து வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். மக்களுக்கு இந்த விடயம் தேவையில்லாத ஒரு பிரச்சினை. மக்கள் கத்தி கூச்சலிடுகின்றனர். எங்களுக்கு டீசல் மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது என அந்த சாரதி இதன்போது தெரிவித்துள்ளார்.