ஐரோப்பாவின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி தொழிற்சாலையை அழித்துள்ள ரஷ்யா: தாக்குதல் வீடியோ காட்சிகள்!


 உக்ரைனின் செயல்பட்டு வரும் ஐரோப்பாவின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி தொழிற்சாலையான அசோவ்ஸ்டல்(Azovstal) ரஷ்ய ராணுவம் மரியுபோல் நகரில் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் தாக்குதலில் உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள், தொழிற்சாலைகள் என பலவும் ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் வான் தாக்குதலில் சீரழிந்து வருகிறது.

அந்த வகையில், ஐரோப்பிய பிராந்தியத்தின் மிக முக்கிய இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி தொழிற்சாலையாக கருதப்படும் அசோவ்ஸ்டல்(Azovstal), ரஷ்ய ராணுவம் உக்ரைனின் மரியுபோல் நகரில் நடத்திய தாக்குதலில் வெடித்து சிதறியுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து டெலிக்ராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அசோவ்ஸ்டாலின் தலைமை இயக்குனர் என்வர் ட்ஸ்கிடிஷ்விலி (Enver Tskitishvili)
உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கிய பிப்ரவரி 24ம் திகதியே அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கோக் ஓவன் பேட்டரிகளால் குடியிருப்புவாசிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லையெனவும், வெடிப்பு உலைகளை தாக்குதலுக்கு முந்தைய சில மணிநேரங்களுக்கு முன்பு சரியாக நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது தாக்குதலுக்குள்ளான அசோவ்ஸ்டல் தொழிற்சாலையானது உக்ரைனின் மிகப்பெரிய பணக்காரான ரினாட் அக்மெடோவ் (Rinat Akhmetov)
என்பவருக்கு சொந்தமானது, இவர் ரஷ்யாவின் போர் தாக்குதலை மனிதகுலத்திற்கும், உக்ரைனியர்களுக்கும் எதிராக நடத்தப்படும் மிகப்பெரிய குற்றம் என விமரிசித்து இருந்தார்.

இந்த தாக்குதல் தொடர்பான விடியோவை உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினர் லெசியா வாசிலென்கோ தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு, மிகப்பெரிய உலோக தொழிற்சாலை அழிக்கப்பட்டுள்ளது, இது உக்ரைனின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் மிகப்பெரிய தாக்குதல் என தெரிவித்துள்ளார்.

இதைப்போலவே மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் செர்ஹி தருடா தெரிவித்துள்ள கருத்தில், ரஷ்யாவின் தாக்குதல் உக்ரைன் தொழிற்சாலைகளை குறிவைத்து நடத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.     

உக்ரைனில் குவியும் போர் ஆயுதங்கள்: ரஷ்யாவின் எச்சரிக்கையை மீறும் அமெரிக்கா!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.