ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் திருட முயன்ற திருடர்கள், அலாரம் ஒலித்ததால் தப்பிச் சென்றனர். பண்ணாரி அம்மன் கோவில் அருகே ராஜன் நகர் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது.
அதிகாலை இந்த வங்கியின் அலாரம் ஒலிக்கவே, அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். வங்கி அதிகாரிகளுடன் போலீசார் சென்று பார்த்தபோது, வங்கிக் கட்டிடத்தின் மேல் மாடி கதவை உடைத்து திருடர்கள் உள்ளே வந்தது தெரியவந்தது.
பணம், நகைகள் வைத்துள்ள பெட்டகத்தை உடைக்க முயன்றபோது அலாரம் ஒலித்ததால் திருடர்கள் வந்த வழியாகவே தப்பிச் சென்றுள்ளனர். வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவிகளில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.