நடிகர்
தனுஷ்
நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம், பாலிவுட் படமான அத்ராங்கி ரே ஆகிய படங்கள் OTT யில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அதைத்தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாறன் படம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. தனுஷ் ரசிகர்களுக்கே இப்படம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. எனவே தான் நடிக்கும் தற்போதைய படங்களை பெரிதும் நம்பியிருக்கின்றார் தனுஷ்.
செல்வராகவனை அவமானப்படுத்திய நடிகை..பதிலடி கொடுத்த தனுஷ்..!
வாத்தி, திருச்சிற்றம்பலம்,
நானே வருவேன்
ஆகிய படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். இதில் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தை தனுஷ் மிகவும் நம்பியுள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனுஷ்,
செல்வராகவன்
,
யுவன் ஷங்கர் ராஜா
ஆகியோர் இணைவதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
மேலும் இப்படம் திரையில் தான் வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளதால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் தற்போது நானே வருவேன் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு இன்னும் 15 நாட்கள் தான் இருக்கின்றதாம். மேலும் இம்மாதம் இறுதியில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளதாம். அதன் பின் விறுவிறுப்பாக இறுதிக்கட்ட பணிகளை முடித்து விரைவில் இப்படத்தை திரையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஃபார்முக்கு வந்த விஜயகாந்த்; போட்டோ பார்த்து குஷியான ரசிகர்கள்!