ஒரு மாத காலமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு சில நாடுகளில் மீண்டும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில்இ உலக நாடுகளில் மீண்டும் தொற்றின் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில்இ உலக சுகாதார அமைப்பை சேர்ந்த மரியா வான் கெர்கோவ் Dr Maria D Van Kerkhove மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வைரஸ் பற்றிய மூன்று தவறான தகவல்களை பட்டியலிட்டுள்ளார்.
ஒமிக்ரான் திரிபு லேசான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்பது தவறான தகவல்.
கொரோனா பரவல் முடிந்துவிட்டது என்பது தவறான தகவல்.
ஒமிக்ரான் தான் கடைசி திரிபு என்று கூறமுடியாது, அடுத்தடுத்த திரிபுகள் வரலாம்.
இது உண்மையில் நிறைய குழப்பத்தை ஏற்படுத்துகிறது” என்று அவர் கூறினார்.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் நான்காவது அலை ஜூன் மாதத்தின் இறுதியில் தொடங்கி நான்கு மாதங்களுக்கு நீடிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு இப்படியே தொடரும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டாக்டர் ஜேக்கப் ஜான் தெரிவிக்கையில் , ’தற்போது உலக நாடுகள் பலவும் வீரியம் மிக்க மாறுபட்ட ஒமைக்ரான் வைரஸினால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இது ஓர் ஆற்றில் நீந்திச் செல்வது போன்றது. இந்தியா அந்த நதியை கடந்துவிட்டது. சில நாடுகள் இன்னும் அதில் நீந்திக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பா, சீனா மற்றும் கொரியாவில் ஒமைக்ரான் பாதிப்பு தாமதமாக ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கத்தை அந்த நாடுகள் சந்தித்து வருகின்றன. இந்தியாவில் அதிமான பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது ஒமைக்ரான் பாதிப்பை குறைவாக இருந்ததற்கு ஒரு காரணம்”என்றார்.