விருத்தாசலம் ஜங்கஷனில் இருந்து தாழநல்லூர் இடையேயான 3 பாலங்களை 13.30 மணி நேரத்தில் கட்டி முடித்து உள்ளனர்.
திருச்சி – விருத்தாசலம் மின்சார இருவழி ரயில்பாதை மார்க்கத்தில் அமைந்துள்ள தாழநல்லூர்-சாத்துக்கூடல் இடையே ரயில் பாதையை கடந்து செல்ல வசதியாக தரைமட்டப் பாலத்தை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு, அதற் கான திட்ட மதிப்பீட்டை ஆய்வு செய்தது.
மேலும், ‘ப்ரீகாஸ்ட்’ எனப்படும் தயார்நிலை கட்டுமானப் பொருட்களைக் கொண்டு பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு, 3 பாலங்களையும் 15 மணி நேர குறுகிய கால இடைவெளியில் முடிக்கத் தயாராகினர்.
அதன்படி, நேற்று காலை 3 மணிக்கு தொடங்கிய பணி, சரியாக மாலை 4.30 மணிக்கு மூன்று பாலங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
சரியாக 13 மணி 30 நிமிடங்களில் இப்பணியை முடித்து புதிய சாதனைப் படைத்துள்ளதாக தெற்கு ரயில்வே துறையின் திருச்சி கோட்டத்தின் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.