ஜம்மு காஷ்மீரில் விரைவில் துணை ராணுவப் படையின் பாதுகாப்பு தேவைப்படாத அமைதியான சூழல் நிலவும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரத்தை நேரில் ஆய்வு செய்ய ,ஸ்ரீநகர் சென்ற அமித் ஷா துணை ராணுவப் படையினரின் 83 வது பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
பாகிஸ்தான் தூண்டுதலின் பேரில் ஊடுருவும் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தியதில் துணை ராணுவப் படையினரின் பங்கை பாராட்டிய அமித் ஷா சிபிஆர் எப் வீரர்களின் உறுதி நாட்டை பாதுகாத்து வருவதாகக் கூறினார்.
நக்சல் பகுதிகளிலும் மத்திய ரிசரவ் படை வீரர்கள் சிறந்த பணியாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். அடுத்த சில வருடங்களில் அமைதியான சூழல் திரும்பும் என்றும் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.