கிருஷ்ணகிரி அருகே ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் வேளாண் கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பாலாறு வேளாண்மை கல்லூரியின் இறுதியாண்டு வேளாண் பட்டபடிப்பு மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் வேளாண் கண்காட்சி நடத்தினர்.
கல்லூரியின் உதவி பேராசிரியர் வைத்தீஷ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக வேளாண்மை உதவி இயக்குனர் பிரியா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த கண்காட்சியில் பாலாறு வேளாண்மை கல்லூரி மாணவர்கள் லோகேஷ், மோகனகுமார், முத்துக்குமார், நரேஷ், நிஷாந்த், நித்தீஷ் குமார், பார்த்திபன், பொன்ராகுல், பிரேம் குமார், ரஞ்சித், சாய் தேஜா, சாய் சரத் குமார் ரெட்டி ஆகியோர் இயற்கை வேளாண்மை, திருந்திய நெல் சாகுபடி, ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம், சாண எரிவாயு, சொட்டு நீர் பாசனம், உழவன் செயலி, மாடித்தோட்டம், விளிம்பு சாகுபடி, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், உயிர் உரங்கள், ஆகிய மாதிரிகளை செய்து பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கும் எடுத்துரைத்தனர். இதில் ஏராளமான மாணவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM