குறிப்பிட்ட தேதிக்கு 9 நாட்கள் முன்னரே திருமணம் செய்த மேக்ஸ்வெல் – என்ன காரணம்?


பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லின் திருமணம் குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே நடந்ததால் ரசிகர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.

இதனிடையே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியா பெண் வினி ராமனை மேக்ஸ்வெல் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்ய முடிவெடுத்தார். தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட இவர்களது திருமண பத்திரிக்கை இணையத்தில் வைரலானது. இருவருக்கும் கடந்த இந்திய முறைப்படி 2020ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக திருமணத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

பல் மருத்துவராக பணியாற்றி வரும் வினி ராமன் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே ஆஸ்திரேலியாவில் தான். சமீபத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மேக்ஸ்வெல் – வினி ராமன் திருமணம், வரும் மார்ச் மாதம் 27 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று முன்தினம் மேக்ஸ்வெல் வினிதா ராமனுடன் திருமணம் முடிந்து விட்டதாக தெரிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. 

ஏன் குறிப்பிட்ட தேதிக்கு 9 நாட்கள் முன்னரே மேக்ஸ்வெல் திருமணம் செய்தார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இந்தியாவில் ஐபிஎல் தொடர் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதன் காரணமாக தற்போது முன்கூட்டியே திருமணத்தை முடித்து விட்டு மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாட ஆர்வமாக உள்ளார் என கூறப்படுகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.