புதுடெல்லி:
உலகம் முழுவதும் தற்போது கொரோனா 4-வது அலை பீதியை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக முன்னாள் பேராசிரியரும் மருத்துவ நிபுணருமான ஜேக்கப் ஜான் கூறியதாவது:-
நாட்டில் கொரோனா 4-வது அலைக்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. ஆனாலும் கண்டிப்பாக வராது என்று உறுதியாக சொல்ல முடியாது. 4-வது அலையை கணிக்க அறிவியல் காரணம் எதுவும் இல்லை. இருந்தாலும் வராது என யாராலும் கணிக்க முடியாது.பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடனும்,மிகுந்த எச்சரிக்யையுடனும் இருக்க வேண்டும்.
புதிய வைரஸ் மாறுபாடுகள் எங்கே தோன்றுகிறது என்பதையும் அதன் தாக்குதல் ஒரு பகுதியில் மட்டும் அதிகரித்து காணப்படுகிறது என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
கணித முறையில் புதிய அலைகள் உருவாவதை கணிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்… கேரளாவில் அடுத்த 5 நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு