கோட்டாபயவின் மாஸ்டர் பிளான் – தீர்மானங்களை மாற்றும் அரசியல் கட்சிகள்



சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி நிலை காரணமாக ராஜபக்ஷ சகோதரர்கள் மீதான மக்களின் வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஐந்து வருட ஆட்சிக்காலத்தில் இரண்டரை வருடங்கள் பூர்த்தியாகி உள்ள நிலையில், எஞ்சிய காலத்தை கடப்பது பெரும் சுமையாக மாறியுள்ளது.

சிக்கியுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாது என உணர்ந்த சமகால அரசாங்கம் அதனை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ள திட்டம் தீட்டுவதாக அரசியல் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை தவிர வேறு எந்தவொரு மார்க்கமும் இல்லையென்ற நிலைப்பாட்டில், அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைந்து தமக்கான தோல்வியின் அளவை குறைக்க திட்டமிடுவதாக சில தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதன் முதற்கட்டமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாடு எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த மாநாட்டை பசில் ராஜபக்ஷவினால் பழிவாங்கப்பட்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் புறக்கணித்துள்ளனர். அதற்கு பதிலாக சர்வகட்சி மாநாட்டிற்கு அரசாங்கத்தின் பத்து பங்காளி கட்சிகளில் இருந்து இரண்டு பிரதிநிதிகளை மாத்திரமே அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களான அத்துரலியே இரத்தின தேரர் மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும், சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் புதன்கிழமை சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ளது.

இதில் கலந்து கொள்ளுமாறு நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி செயலகம் கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

அரசாங்கம் உண்மையான நோக்கத்துடன் சர்வக் கட்சி மாநாட்டை கூட்டவில்லை என வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக பங்காளிக் கட்சி ஒன்றின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஆளும் கட்சி அல்லது அமைச்சரவைக்குள் கலந்துரையாடாமல் சர்வகட்சி மாநாட்டை கூட்டுவது போலியான ஒரு விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.