சுதந்திரமாக செயல்பட அனைவரும் நீதித்துறை மீது நம்பிக்கை வையுங்கள் என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.
துபாயில் நடைபெற்ற சர்வதேச நீதித்துறை மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்தியாவின் நீதித்துறை முற்றிலும் சுதந்திரமானது என்பதை உலகம் கண்டுணர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அரசுக்கும் நீதித்துறைக்கும் எந்தவித முரண்பாடும் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
தாம் வெளிநாட்டுப் பயணம் செல்லும் இடமெல்லாம் இந்தியாவின் நீதித்துறை முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்குமா என்ற கேள்வி எழுவதை சுட்டிக் காட்டிய நீதிபதி ரமணா, இந்திய நீதிமன்றங்கள் நடுநிலையுடன் தீர்ப்பு வழங்குவதில் பெயர் பெற்றவவை என்றும் தொழில் செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்குவதில் உறுதி கொண்டு இருப்பவை என்றும் குறிப்பிட்டார்.