செல்லாத பழைய 5 பைசா நாணயம் கொடுத்தால் ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என காஞ்சிபுரத்தில் புதிய கடை ஒன்று அறிவிப்பு வெளியிட்ட நிலையில், ஏராளமானோர் 5 பைசா நாணயத்தை கொடுத்து பிரியாணி வாங்கிச் சென்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய பிரியாணி கடை திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க 5 பைசா நாணயத்துடன் வரும் முதல் 50 பேருக்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 12 மணி முதல் பிரியாணி விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 10 மணி முதலே பிரியாணி பிரியர்கள் 5 பைசா நாணயத்துடன் வரிசையில் காத்திருந்து, பிரியாணி வாங்கிச் சென்றனர்.