மொத்தமாக வாங்குவோருக்கு டீசல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இது மொத்த பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது சர்வதேச அளவில் உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் 40% அதிகரித்துள்ள நிலையில், இந்த விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரூ.10,440 கோடி முதலீடு செய்யும் ஜப்பான் நிறுவனம்.. எந்த மாநிலத்தில் தெரியுமா?
டீசல் விலை அதிகரிப்பு
எனினும் சில்லறை பம்புகளில் விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலையில் பெரியளவில் மாற்றம் செய்யப்படவில்லை. எனினும் மொத்தமாக வாங்கப்படும் அரசு போக்குவரத்து கழகங்கள் உட்பட மொத்தமாக வாங்குவோருக்கு டீசல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு இழப்பு
இந்த விலை அதிகரிப்பு காரணமாக தமிழ் நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நாள்தோறும், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் 15 – 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான டீசல் கொள்முதல் செய்து வருகின்றது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
சில்லறை விற்பனையில் 136 நாட்களாக விலையில் பெரும் அளவிலான மாற்றம் செய்யப்படவில்லை. 2008ம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பொதுத்துறை நிறுவன போட்டியால், நாட்டில் உள்ள 1432 பெட்ரோல் பம்புகளை மூடியது.
டீசல் விலை
தற்போது மும்பையில் மொத்தமாக பயன்படுத்துவோருக்கு விற்கப்படும் டீசல் விலை லிட்டருக்கு 122.05 ரூபாயாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே பெட்ரோல் நிலையங்களில் 94.14 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது. இதுவே டெல்லயில் டீசல் விலை பெட்ரோல் நிலையங்களில் 86.67 ரூபாயாக உள்ள டீசல் விலை, தொழிற்துறையில் 115 ரூபாயாகவும் உள்ளது.
Diesel price for bulk users hiked by Rs.25 per litre amid Ukraine tension
Diesel price for bulk users hiked by Rs.25 per litre amid Ukraine tension/டீசல் விலை ரூ.25 அதிகரிப்பு.. யாருக்கெல்லாம் விலை அதிகரிப்பு தெரியுமா?