தங்கம் விலை ரூ.4000 சரிவு..இது வாங்க சரியான இடமா.. இனி வரும் வாரத்தில் எப்படியிருக்கும்..!

தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் சமீபத்திய உச்சத்தில் சரிவில் காணப்படுகின்றது.

எனினும் நீண்டகால நோக்கில் தங்கத்தின் விலையினை ஊக்குவிக்கும் விதமாகவே பல காரணிகள் உள்ளன. குறிப்பாக ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது வந்துள்ளது.

எனினும் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது வட்டி விகிதத்தினை சில தினங்களுக்கு முன்பு அதிகரித்தத்து. இது தங்கம் விலையில் சற்றே தாக்கத்தினை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாகவே சற்று சரிவினைக் கண்டு இருந்தது.

ரூபாய் மதிப்பு சரிவு.. ஆர்பிஐ எடுத்த நடவடிக்கை.. 2 வருட சரிவில் அந்நியச் செலாவணி..!

ரூ.4000-க்கு மேல் சரிவு

ரூ.4000-க்கு மேல் சரிவு

இந்திய சந்தையில் தங்கம் விலையானது கடந்த அமர்வில் சற்று அதிகரித்து 51,475 ரூபாய் என்ற லெவலில் காணப்பட்டது. எனினும் 10 கிராமுக்கு முந்தைய வாரத்தில் அதிகபட்சமாக 55,558 ரூபாயாக உச்சம் தொட்டது. ஆக அதனுடன் ஒப்பிடும்போது 4,000 ரூபாய்க்கு மேலாக சரிவினைக் கண்டு காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைக்கும் வர்த்தகர்களுக்கு இது சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதம் இன்னும் அதிகரிக்கலாம்

வட்டி விகிதம் இன்னும் அதிகரிக்கலாம்

இந்த வட்டி அதிகரிப்பானது கடந்த 2018ம் ஆண்டுக்கு பிறகு 25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டுக்குள் இன்னும் பல முறை வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது மத்திய வங்கியானது பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க எடுத்த முக்கிய நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.இந்த வட்டி விகிதம் நடப்பு ஆண்டில் 6 முறை அதிகரிக்கலாம் எனவும், அதனை தொடர்ந்து அடுத்த நிதியாண்டில் 2023ம் ஆண்டில் 3 முறை வட்டி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திர சந்தையும் சாதகம்
 

பத்திர சந்தையும் சாதகம்

அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், அதுவும் டாலரின் மதிப்பு இன்னும் ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது. இதனால் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடரும் பட்சத்தில் இன்னும் தங்கம் விலையில் அழுத்தம் இருக்கலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

பங்கு சந்தைகள் உச்சம்

பங்கு சந்தைகள் உச்சம்

கடந்த வாரத்தில் சில தினங்களாகவே வட்டி விகிதம் அதிகமாகவே உள்ளது. இதற்கிடையில் பங்கு சந்தையும் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. ஆக இதுவும வட்டியில்லா முதலீடான தங்கம் விலையில் அழுத்தத்தினை தானே ஏற்படுத்தும், அப்படியிருப்பினும் ஏன் தங்கம் விலை அதிரித்துள்ளது என்ன காரணம் என்ற கேள்வியும், குழப்பமும் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on march 20th 2022: gold prices fall Rs.4000 from recent highs, should you buy after rate hike?

gold price on march 20th 2022: gold prices fall Rs.4000 from recent highs, should you buy after rate hike?/ தங்கம் விலை ரூ.4000 சரிவு..இது வாங்க சரியான இடமா.. இனி வரும் வாரத்தில் எப்படியிருக்கும்..!

Story first published: Sunday, March 20, 2022, 11:06 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.