தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் – இணையத்தை கலக்கும் புகைப்படம்



பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். 

இதனிடையே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியா பெண் வினி ராமனை மேக்ஸ்வெல் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்ய முடிவெடுத்தார். தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட இவர்களது திருமண பத்திரிக்கை இணையத்தில் வைரலானது. இருவருக்கும் கடந்த இந்திய முறைப்படி 2020ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக திருமணத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

பல் மருத்துவராக பணியாற்றி வரும் வினி ராமன் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே ஆஸ்திரேலியாவில் தான். சமீபத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மேக்ஸ்வெல் – வினி ராமன் திருமணம், வரும் மார்ச் மாதம் 23 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கிடையில் கிறிஸ்தவ முறைப்படி தம்பதிகள் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்துக் கொண்டனர். பின் இருவரும் அன்புடன் முத்தமிட்டு மகிழும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. மேக்ஸ்வெல் வெளியிட்டுள்ள அந்த பதிவில் காதல் என்பது நிறைவுக்கான தேடல், உன்னுடன் நான் முழுமையாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார். 





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.