ஜோஹன்ஸ்பேர்க்,
வங்காளதேச அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய வங்காள தேச அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று ஜோஹன்ஸ்பேர்க்கில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி போட்டி 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காள தேச அணி கேப்டன் தமீம் இக்பால் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த போட்டியை வெல்லும் பட்சத்தில் வங்காளதேச அணி தொடரை கைப்பற்றும். அதே நேரத்தில் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பெரும் முனைப்புடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.