அமேசான் பிரைமில் ஒளிப்பரப்பாக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்க வெப் சிரீஸ் ‘The Boys’. இதில் Kimiko Miyashiro என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் கரேன் புகுஹரா (Karen Fukuhara) மார்ச் 16 அன்று முன்பின் தெரியாத ஒருவரால் தாக்கப்பட்டிருக்கிறார். தனக்கு நேர்ந்த இந்தச் சம்பவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கரேன் ‘இது போன்று நடப்பது நிறுத்தப்பட வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்துள்ளார். “இன்றைக்கு நான் ஒரு மனிதனால் தாக்கப்பட்டேன். (உடல்ரீதியாக நலம்) இது போன்று நடப்பது நிறுத்தப்பட்ட வேண்டும்) நாங்கள், பெண்கள், ஆசியர்கள், வயது முதிந்தவர்களுக்கு உங்கள் உதவி தேவை.” என்று கரேன் பதிவிட்டு இருக்கிறார்.
அந்தச் சம்பவத்தை விவரிக்கும் போது, “நான் கஃபேக்கு நடந்து செல்லும்போது ஒரு மனிதன் என் தலையில் பின்புறத்தில் இருந்து தாக்கினான். எங்கிருந்து வந்தான் எனத் தெரியவில்லை. இதற்கு முன்னர் பார்த்தது கூட இல்லை. திடீரென நடந்த போது என்னுடைய தொப்பி பறந்தது. நான் பின்னால் திரும்பி பார்க்கும் போது சில அடிகள் தள்ளி அவன் நின்றிருந்தான். என்னைத் தாக்கி விட்டு பின்னகர்ந்து இருக்க வேண்டும். நான் அவனை எதிர்கொள்ள தயாரானால், அவன் என்னை நோக்கி வந்துவிட்டால் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என எண்ணினேன். சில வினாடிகளுக்கு பிறகு ஒருவரை ஒருவர் பார்க்க நேர்ந்தது. என்னைப் பார்த்து கத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான்” மேலும், “இது தான் முதல்முறையாக நான் தாக்கப்படுவது. இதற்கு முன்னர் இனப்பாகுபாடு வசைகள், புண்படுத்தும் செயல்களை எதிர்கொண்டிருக்கிறேன். அவன் என்னை மீண்டும் தாக்கலாம். ஆயுதங்களுடன் கூட வரலாம். ஒரு பெண்ணை, ஆசிய இனத்தவரை/ வயதானவர்களைத் தாக்குவதால் இவர்களுக்கு என்ன கிடைத்து விடப்போகிறது. ஒரு சமூகமாக இது போன்று நடப்பதை தடுக்க நாம் என்ன செய்திருக்கிறோம். ” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இது நடந்த சமயத்தில் உடன் பணிபுரியும் நண்பர்கள் அவருக்கு உதவ முன்வந்திருக்கிறார்கள்.