பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் கிடைத்த அமோக வெற்றியால் உற்சாகமடைந்துள்ள ஆம் ஆத்மி கட்சி இப்போது ராஜஸ்தானில் களமிறங்க கவனம் செலுத்துகிறது. ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், ராஜஸ்தானில் ஆம் ஆத்மி அமைப்பை பலப்படுத்த ஜெய்ப்பூரில் இரண்டு நாள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலப் பொறுப்பாளரும் ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் சிங் மார்ச் 26- 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சியில் கட்சியின் நலக் கொள்கைகள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 200 தொகுதிகளில் 142 வேட்பாளர்களை நிறுத்தியது. இதில் ஒரு தொகுதியில் கூட ஆம் ஆத்மி வெற்றிப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.. வண்டலூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்- பணி நியமன ஆணைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்