பாகிஸ்தான் சியால்கோட் ராணுவ தளத்தில் மிகப்பெரிய வெடிகுண்டு வெடிப்பு!

சியால்கோட்: பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் பெரிய அளவில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளதால், ராணுவ தளம் தீப்பிடித்து எரிந்த நிலையில், குண்டுவெடிப்புகளால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த குண்டுவெடிப்புகள் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

சியால்கோட்டில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு

பாகிஸ்தானில் இம்ரான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், சியால்கோட்டில் குண்டு வெடிப்புகள் நேரிட்டுள்ளது இம்ரான் அரசை சிக்கலில் தள்ளியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் ஷியா மசூதியில்  நடந்த தாக்குதல் 

இந்த மாதம் பெஷாவரில் உள்ள ஷியா மசூதியில் நடந்த தற்கொலைத் தாக்குதல் நடந்தலில் குறைந்தது 64 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 200 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிக் ஸ்டேட்-கொராசன் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

சிக்கலில் பிரதமர் இம்ரான் கான்

இம்ரான் அரசு பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என எதிர் கட்சிகள் அழுத்தம் கொடுக்கின்றன. நாட்டில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம்  மோசமடைவதற்கு இம்ரான் அரசு தான் காரணம் என குற்றம் சாட்டி, எதிர்க்கட்சிகள் மார்ச் 8 அன்று தேசிய சட்டமன்ற செயலகத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்தன. 

நம்பிக்கையில்லா தீர்மானம்

இதற்கிடையில், இம்ரான் அரசின் 24 எம்.பி.க்கள் கட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து எதிர்க்கட்சி முகாமில் இணைந்துள்ளனர். அதேநேரம், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான அமர்வை மார்ச் 21ம் தேதி கூட்ட வேண்டும் என்றும், 28ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.