பாஜகவின் கட்டுக்கதைகளுக்கு எம் எல் ஏக்கள் பதிலடி கொடுக்க வேண்டும் : சரத்பவார் வேண்டுகோள்

மும்பை

பாஜகவின கட்டுக்கதைகளுக்கு மகாவிகாஸ் அகாடி சட்டமன்ற உறுப்பினர்கள் பதிஒலடி கொடுக்க வேண்டும் என சரத்பவார் கேட்டுக் கொண்டுள்ளார்,

மகராஷ்டிர மாநிலத்தில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி செலுத்தி வருகிறது.  இந்த கூட்டணியில் சிவசேனா,தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்துள்ளன,   நேற்று இந்த கூட்டணியின் இளம் சட்டசபை உறுப்பினர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

அந்த சந்திப்பில்  தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த அமைச்சர் அதீதி தட்காரே, ரோகித் பவார், அதுல் பென்கே, அசுதோஷ்காலே, இந்திரானில் நாயக் மற்றும் காங்கிரசை சேர்ந்த தீரஜ் தேஷ்முக், ருத்துராஜ் பாட்டீல், யோகேஷ் கதம் (சிவசேனா)  ஆகியோர் கலந்துக் கொண்டனர்.  இந்த சந்திப்பு குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபாசே ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில்,

“சட்ட சபை உறுப்பினர்களிடம்  சரத்பவார் தாம் இளம் அரசியல் தலைவராக இருந்த போது ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இருந்த உறவையும், தற்போது ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே நிலவும் உறவு குறித்தும் தமது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். பாஜகவினர் சித்தரிக்கும் தவறான கட்டுக்கதைகளுக்குச் சட்டசபையிலும், வெளியேயும் ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.

அவர் மகாவிகாஸ் அகாடி தனது முழு ஆட்சி காலத்தை நிறைவு செய்யும் என அவர்களிடம் உறுதி அளித்தார்.மேலும் தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளில் கவனம் செலுத்தவும், மக்கள் பிரச்சினைகளை அரசிடம் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தார்.  இளம் சட்டமன்ற உறுப்பினர்கள்பாஜகவை தங்கள் தொகுதி மட்டுமில்லாமல் மாவட்டம், மண்டல அளவிலும் கடுமையாக எதிர்ப்பதாக உறுதி அளித்தனர்.“

எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.