இஸ்ரேல் பிரதமர் நாஃப்டாலி பென்னட் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஏப்ரல் 2 ஆம் தேதி டெல்லி வருகிறார்.இதனை இஸ்ரேல் அரசு உறுதி செய்துள்ளது.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று முதன்முறையாக இந்தியா செல்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக பென்னட் தெரிவித்துள்ளார்.
இருநாடுளின் உறவுகளும் இந்தப் பயணத்தில் மேம்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவில் வாழும் யூத இனத்தவரை சந்தித்துப் பேசவும் பென்னட் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்தியா-யூதர் கலாசாரம் பல ஒற்றுமைகள் கொண்டது என்றும் இந்தியா இஸ்ரேல் நட்பு 30 ஆண்டுகளாக நீடித்து வருகிறது என்றும் இஸ்ரேல் பிரதமர் பென்னட் தெரிவித்துள்ளார்