புடினுக்கு பதிலாக… தெரிவான முன்னாள் உளவாளி: வெளிச்சத்துக்கு வரும் இரகசிய பின்னணி


ரஷ்யாவில் தற்போதுள்ள அனைத்து குழப்பங்களுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் காரணம் விளாடிமிர் புடினின் செயற்பாடுகள் என குற்றஞ்சாட்டியுள்ள பலம் பொருந்திய உயர்மட்ட குழு, அவரை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ரஷ்யாவை தற்போதைய நெருக்கடிகளில் இருந்து மீட்க, ஜனாதிபதி விளாடிமிர் புடினை கொலை செய்தாவது தங்கள் திட்டத்தை நிறைவேற்ற Russian elite குழு உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், விளாடிமிர் புடினிக்கு பதிலாக ரஷ்ய ஜனாதிபதி பொறுப்புக்கு முன்னாள் KGB உளவாளியும் தற்போதைய FSB தலைவருமான Oleksandr Bortnikov என்பவரை Russian elite குழு உறுப்பினர்கள் தெரிவு செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

விளாடிமிர் புடினும் Oleksandr Bortnikov என்பவரும் ஒன்றாகவே KGB-ல் பணியாற்றியுள்ளனர்.
பின்னர் FSB என்ற பாதுகாப்புத் துறை ஒன்றை Oleksandr Bortnikov கட்டமைத்து, புடின் அரசாங்கத்தின் மூளையும் இதயவுமாக செயல்பட்டு வந்துள்ளார்.

ஆனால் தற்போது உக்ரைன் விவகாரத்தில், புடின் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை ஒப்புக்கொள்ள மறுத்து புடினிடம் இருந்து விலகியுள்ளார் Oleksandr Bortnikov.

உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுக்க, Oleksandr Bortnikov தகுதியான நபர் எனவும் Russian elite குழு உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி, தமக்கு நம்பகமான அதிகாரிகள் உக்ரைனில் இருப்பதால், போரை முடிவுக்கு கொண்டுவரவும், சுமூக பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவும் அவரால் முடியும் என Russian elite குழு உறுப்பினர்கள் நம்புகிறார்கள்.

மேலும், ரஷ்ய துருப்புகள் உக்ரைனில் கடும் எதிர்வினையை எதிர்கொள்ள காரணமாக அமைந்தது Oleksandr Bortnikov தலைமையிலான FSB தவறான ஆய்வுகளை முன்னெடுத்ததே எனவும்,
உக்ரைனில் தற்போதைய சூழல் என்ன, அங்குள்ள இராணுவ பலம் என்ன உள்ளிட்ட அதி முக்கிய தகவல்களை திரட்டுவதில் FSB விலை போனதாக விளாடிமிர் புடின் நம்புவதாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலடியாக அதிகாரிகள் பலரை விளாடிமிர் புடின் நீக்கியுள்ளார்.
ஆனால் தம்முடனே உளவுத்துறையில் பணியாற்றியுள்ளதால் Oleksandr Bortnikov மீது உக்ரைன் விவகாரத்தில் புடின் சந்தேகம் கொள்ளவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
இருப்பினும் உக்ரைன் விவகாரத்தில், அந்த மக்களின் கண்ணீரில், இரத்தத்தில் தமக்கு பங்கில்லை என்றே Oleksandr Bortnikov கூறுவதாக தகவல் கசிந்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.