புடினை அதிபர் பதவியிலிருந்து தூக்கியெறிய ரஷ்யாவின் பலம்மிக்க (Elites) குழு திட்டமிட்டுள்ளதாக உக்ரைனின் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது 25வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, தலைநகர் கீவ் உட்பட முக்கிய நகரங்கள் மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதனால், ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு, பங்குச் சந்தை மற்றும் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளின் விளைவாக ரஷ்யாவில் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மேற்கத்திய நாடுகளுடனான பொருளாதார உறவை மீட்டெடுக்க, புடினை அதிபர் பதவியிலிருந்து தூக்கியெறிய ரஷ்யாவின் பலம்மிக்க (Elites) குழு திட்டமிட்டுள்ளதாக உக்ரைனின் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.
புடினுக்கு பதிலாக FSB பாதுகாப்பு அமைப்பின் தலைவர் Aleksandr Bortnikov ரஷ்ய அதிபராக்க பலம்மிக்க (Elites) குழு திட்டமிட்டுள்ளதாக உக்ரைனின் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.