ஆக்லாந்து,
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 19 ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து- இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக மேடி கிரீன் 52 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீராங்கனைகள் யாரும் சோபிக்காத நிலையில் இறுதியில் அந்த அணி 48.5 ஓவர்கள் முடிவில் 203 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதனை அடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. சிறப்பாக விளையாடியாந்த அணியின் சிவேர் 61 ரன்கள் குவித்தார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 47.2 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டியது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 1 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.