ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தைக்கு தான் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜெலன்ஸ்கி, புடினுடன் பேச்சுவார்த்தைக்கு நான் தயாராக இருக்கிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் தயாராக இருக்கிறேன்.
பேச்சுவார்த்தைகள் இல்லாமல் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முடியாது என்று நான் நினைக்கிறேன்.
புடினுடன் பேசுவதற்கு சாத்தியமான அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
ஆனால், புடினுடனான பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியுற்றால், இது மூன்றாம் உலகப் போர் என்று அர்த்தம் என்று ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு அதன் நான்காவது வாரத்தை நெருங்கியுள்ள நிலையில், சமீபத்திய நாட்களில் மேலதிக பேச்சுவார்த்தைகளுக்கு ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட வீடியோவில், தாமதமின்றி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார், இல்லையெனில் ரஷ்யாவின் இழப்புகள் பெரியதாக இருக்கும் என்று ஜெலன்ஸ்கி எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.