"ப்ளு சட்டை மாறன் சொன்னதைத் தாங்க முடியல. அதனாலதான்…"- ஆர்.கே.சுரேஷ் வருத்தம்

“‘விசித்திரன்’ படம் கூடிய சீக்கிரம் ரிலீஸாக போகுது. இந்தப் படம் நல்லா வந்திருக்குறதுக்கு முக்கியமான காரணம் பத்மகுமார் சார். மலையாளத்துல ‘ஜோசப்’ படத்தை எடுத்தவரே தமிழ்ல எங்ககூட வொர்க் பண்ண முன்வந்தார். இதுக்கு முக்கியமான காரணம் பாலா சார். மலையாளத்துல ஹிட்டடித்த விஷயங்களும் இதுல இருக்கும். இதைத் தாண்டி மலையாளத்தை விட இன்னும் பெட்டரா இருக்கணும்னு பாலா சார் சொன்னார். படத்தை பார்த்த இயக்குநர்கள் எல்லாரும் ரொம்ப நல்லாயிருக்குனு சொல்லியிருக்காங்க. மலையாளம் ஒரிஜினல் வெர்ஷன் மிகவும் எனக்கு பிடிக்கும். ‘ஜோசப்’ பார்த்துட்டு மூணு நாள் வரைக்கும் தூங்கல. அதனாலதான் இதை எடுத்தோம். உடனே, தமிழ் ரீமேக் ரைட்ஸ் வாங்கினேன்.” – உற்சாகமாகப் பேசுகிறார் ஆர்.கே.சுரேஷ். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ஜோஜூ ஜார்ஜ்

இந்தப் படத்துக்காக ரொம்ப மெனக்கெட்டிருக்கீங்க போல…

“மலையாளத்துல ஜோஜூ ஜார்ஜ் நடிச்சு ரிலீஸான படம் அது. ‘ஜோசப்’ மலையாளத்தை இவரே தயாரிச்சும் இருப்பார். இந்தப் படத்தை வாங்குறப்போ நிறைய விஷயங்களைச் சொன்னார். ‘டார்லிங், இதுல வெயிட் குறைக்கமா நடிச்சிருந்தேன். நீ பண்றப்போ வெயிட் லாஸ் பண்ணுனு’னார். நானும் இதே ஐடியாலதான் இருந்தேன். இந்தப் படத்துல என்னோட மூணு கேரக்டருக்கும் ஏத்த மாதிரியே உடல் எடையைக் குறைச்சு ஏத்தி நடிச்சிருக்கேன். இதை முதன்முதலா ஜோஜூ ஜார்ஜ்கிட்டதான் சொன்னேன். ‘கண்டிப்பா, நீங்க பண்ணுனா ரொம்ப நல்லாயிருக்கும்’னார். ‘என்னால பண்ண முடியாததா நீங்க பண்றீங்கனு’ சந்தோஷப்பட்டார். படத்தோட கதைக்கும் இது தேவைப்பட்டது. முப்பது கிலோ குறைச்சு ஒரு கேரக்டரும், பதினைஞ்சு கிலோ குறைச்சு இன்னோரு கேரக்டரும் பண்ணியிருக்கேன். என்னோட லுக்கையும் முழுசா மாத்தியிருக்கேன். ஹேர் முழுக்க ஒயிட் டை அடிச்சு நடிச்சேன்.”

படத்துல உங்க கேரக்டர் பெயர்தான் விசித்தரனா?

“என்னோட கேரக்டர் பெயர் மாயன். அதே பெயரை படத்துக்கு வெச்சா நல்லாயிருக்கும்னு டைரக்டர் முத்தையாதான் சொன்னார். ஆனா, பாலா சார் ‘விசித்திரன்’னு இருக்கட்டும்னு சொன்னார். ஏன்னா, எல்லாத்துல இருந்தும் வேறுப்பட்டவன்னு சொல்லி இந்தப் பெயரை செலக்ட் பண்ணினார்.”

ஒரு தயாரிப்பாளரா பாலா என்ன சொன்னார்?

ஆர்.கே.சுரேஷ்

“படத்தோட எடிட் வெர்ஷன் முடிஞ்சவுடனே பாலா சார் பார்த்தார். பார்த்துட்டு, ‘இந்தப் படத்துக்கு பிறகு உன்னோட புருஷன் வேற லெவலுக்கு போயிருவானு’ என்னோட மனைவிக்கிட்ட சொல்லிட்டு போயிட்டார். என்கிட்ட இப்போ வரைக்கும் எதுவும் சொல்லல.”

அஜித்துக்கு சப்போர்ட் பண்ணி பேசுனது பற்றி?

“இதைப் பற்றி ‘விசித்திரன்’ ஆடியோ லான்ச்ல பேசல. அப்போ, பேசியிருந்தா என்னோட படத்துக்கு புரொமோஷன் பண்றேன்னு சொல்லியிருப்பாங்க. ஒரு தனிமனிதனின் உருவம் மற்றும் நிறத்தை பற்றிச் சொல்றப்போ வருத்தமா இருக்கு. தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவரா இருக்குறதுக்கும் மேல அஜித் சாரின் ரசிகனா இருக்கறது பெருமை. அவருக்காக படமே எடுத்திருக்கேன். அந்தளவுக்கு அஜித்தோட ரசிகன் நான். இதனாலதான், என்னால ப்ளு சட்டை மாறன் சொன்னதைத் தாங்க முடியல” என ட்விட்டர் பஞ்சாயத்துக்குள் வந்தார்.

ஆர்.கே.சுரேஷ், பாலா

ப்ளு சட்டை மாறன் ட்வீட் பார்த்தீங்களா?

“இப்போ வரைக்கும் ட்வீட் பண்ணிட்டுதான் இருக்கார். ஒரு ரசிகரின் தாக்கத்தையும், வெறுப்பயையும் சாதகமா எடுத்துக்கக் கூடாது. ‘பீஸ்ட்’க்கு என்ன விமர்சனம் பண்ண போறார்னு தெரியல. கண்டிப்பா பாசிட்டிவாதான் சொல்லுவார். ஏன்னா, கதை எனக்கு தெரியும். நல்லா வந்திருக்கு படம். மாறனோட ‘ஆன்டி இந்தியன்’ படம் ரிலீஸானப்போ பாராட்டி ட்வீட் போட்டேன். அந்தப் படத்தோட புரொடியூசர் எனக்கு நண்பர். அதனால, டிக்கெட்லாம் எடுத்து கொடுத்திருக்கேன்.”

பாலாவுடன் சூர்யா இணையுற படம்… எப்படி எதிர்பார்க்கலாம்?

“படத்தோட ஸ்க்ரிப்ட் வேற லெவல்ல இருக்கும். சூர்யா சாருக்கு ரொம்ப முக்கியமான படமா இருக்கும். சீக்கிரமே படத்தோட ஷூட்டிங்கிற்காக கன்னியகுமாரி கிளம்புறாங்க டீம்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.