மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாளக்கிபட்டி கருங்குளத்து கண்மாய் மற்றும் சருகுவலையபட்டி நைனான் கண்மாய்களில் பாரம்பரிய மீன்பிடித்திருவிழா நடைபெற்றது.
இதில் உள்ளூர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு உற்சாகத்துடன் மீன்பிடித்து மகிழ்ந்தனர். நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற இந்த திருவிழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர்.
இதில் நாட்டு வகை மீன்களான கட்லா, ரோகு, கெழுத்தி, கெண்டை, குரவை உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் சிக்கின. அவற்றை பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்று சமைத்து, இறைவனுக்கு படையலிட்ட பின்னர் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.