கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு கடுமையாக்கி உள்ளது.
கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள சுாங்சுன், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட நகரங்களில்
முழு ஊரடங்கு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மேற்கு ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், கடந்த இரண்டு வாரங்களாக, கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனா தினசரி பாதிப்பு சுமார் 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் முகக் கவசத்தை, வரும் 23 ஆம் தேதி முதல், பொது மக்கள் வீட்டிற்குள் அணிய வேண்டும்
ஆஸ்திரியா
சுகாதாரத் துறை அமைச்சர் ஜோஹன்னஸ் ரவுச் தெரிவித்து உள்ளார்.
இதேப் போல், தனிமைப்படுத்தல் தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
முழு ஆண்டு தேர்வுகள் ரத்து – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
கடந்த 5 ஆம் தேதி அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் ஆஸ்திரியா அரசு நீக்கியது. அதன்படி பொது இடங்கள், பொது போக்குவரத்து, மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் மட்டுமே முகக் கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில், கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கும் முதல் நாடு ஆஸ்திரியா என்பது குறிப்பிடத்தக்கது.