மின்சாரம் தாக்கி காயமடைந்த சிறுவன்: முதல்வர் ஸ்டாலின் செய்த உதவி

மின்சாரம் தாக்கி காயமடைந்த சிறுவனின சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை வீட்டிற்கே நேரில் சென்று தேனி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் அருகே லோயர் கேம்ப் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இரண்டாம் வகுப்பு படிக்கும் இவரது மகன் பகவதி, கடந்த 2021 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக மின் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார்: இதையடுத்து உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள தலைமை செயலகத்திற்கு நேரில் சென்று தமிழக முதலவரிடம் தங்கள் மகனின் நிலை குறித்தும் குடும்ப வறுமையை குறிப்பிட்டும் மனுக் கொடுத்தார்.
image
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் அச்சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்காகவும் கல்வி கற்பதற்காகவும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 இலட்சம் வழங்கிட உத்தரவிட்டார். அதன்படி தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.வீ. முரளிதரன்லோயர் கேம்பில் உள்ள பாதிக்கப்பட்ட சிறுவனின் வீட்டிற்கு நேரில் சென்று முதல்வரின பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை சிறுவனின் பெற்றோரிடம் வழங்கினார்.
இதனையடுத்து பெற்றோர்கள் தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர். நிகழ்வில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.