மிஸ்டர் ஜு கீப்பர் – ஹீரோவான புகழ்
டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். சில படங்களிலும் நடித்தார். ஆனால், அந்தப் படங்கள் அவருக்கு எந்த ஒரு பெயரையும் வாங்கித் தரவில்லை. இருந்தாலும் அதற்குள் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
'வேலை', மாதவன், சினேகா நடித்த 'என்னவளே' ஆகிய படங்களை இயக்கிய சுரேஷ் இயக்க, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க உருவாகும் 'மிஸ்டர் ஜு கீப்பர்' படத்தின் மூலம் நாயகனாக நடிக்கப் போகிறார் புகழ்.
இந்தப் படத்தின் முதல் பார்வை இன்றைய 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் வெளியிடப்பட உள்ளது. விஜய் டிவியிலிருந்து பிரபலமாகி சினிமாவுக்கு வந்த சந்தானம், சிவகார்த்திகேயன், யோகி பாபு வரிசையில் புகழும் நாயகனாக உயர்ந்துள்ளார்.
சந்தானம், யோகி பாபு ஆகியோர் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த பின்னர்தான் நாயகனாக மாறினார். ஆனால், புகழுக்கு இந்த நாயகன் வாய்ப்பு வெகு சீக்கிரமே கிடைத்துள்ளது.