மீண்டும் ஒரு ஜூம் காலில் பணி நீக்கம்.. பெட்டர்.காமை போல பி&ஓ ஃபெரிஸ்.. ஊழியர்கள் கண்ணீர்..!

பெட்டர்.காமின் தலைமை செயல் அதிகாரி விஷால் கார்க்கினை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஒரே ஜூம் காலில் 900 பேரை பணி நீக்கம் செய்தவர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான விஷால் கார்க் நியூயார்க் நகரில் செயல்படும், பெட்டர்.காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர். இவர் தான் வெறும் 3 நிமிட ஜூம் காலில் 900 பேரை பணி நீக்கம் செய்தவர்.

பெட்டர்.காமின் இந்த நடவடிக்கையானது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ ஒன்று வைரலாக சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை பதிவு செய்தனர்.

தங்கம் விலை ரூ.4000 சரிவு..இது வாங்க சரியான இடமா.. இனி வரும் வாரத்தில் எப்படியிருக்கும்..!

எனக்கு வேறு வழியில்லை

எனக்கு வேறு வழியில்லை

அதன் பின்னர் நான் ஊழியர்களை சங்கப்படுத்திவிட்டேன், நான் உங்களை காயப்படுத்தி விட்டேன், என்னை மன்னித்து விடுங்கள் என நான் இதுபோன்று செய்ய விரும்பவில்லை. இது எனது பணிக் காலத்தில் இது இரண்டாவது நடவடிக்கை. இதனை எடுக்க துளியும் விருப்பமில்லை. ஆனால் எனக்கு வேறு வழியில்லை.

ஊழியர்கள் ராஜினாமா?

ஊழியர்கள் ராஜினாமா?

இதனை நிச்சயம் கேட்க விரும்ப மாட்டீர்கள். இந்த ஜூம் காலில் நீங்கள் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர். நீங்கள் தற்போதிலிருந்து பணி நீக்கம் செய்ப்படுகிறீர்கள் என கூறியிருந்தார். இப்படி சர்ச்சைகளுக்கு மத்தியில் பணியில் இருந்து ஓய்வில் சென்ற விஷால் கார்க், திரும்ப மீண்டும் அலுவலகம் திரும்பிய போது, பல ஊழியர்கள் தங்களது வேலையினை ராஜினாமா செய்தனர்.

பி & ஓ பெரிஸ் பணி நீக்கம்
 

பி & ஓ பெரிஸ் பணி நீக்கம்

மேலும் அலுவலகம் திரும்பிய விஷால் கார்க் மெயில் மூலமாக மீண்டும் 3,000 பேரை பணி நீக்கம் செய்தார். இப்படி பணி நீக்கம் மூலமே பிரபபலமானவர் தால் பெட்டர் காம் தலைமை செயல் அதிகாரி. இந்த நிலையில் பெட்டர்.காம் நிறுவனத்தினை போலவே, பிரிட்டீஸ் நிறுவனமான பி & ஓ பெரிஸ் நிறுவனமும் ஜூம் காலில் பணி நீக்கம் செய்துள்ளது.

பிரிட்டீஸ் நிறுவனத்தில் ஜூம் காலில் பணி நீக்கம்

பிரிட்டீஸ் நிறுவனத்தில் ஜூம் காலில் பணி நீக்கம்

பிரிட்டீஸ் நிறுவனமான பி & ஓ பெரிஸ் பெட்டர்.காமை போலவே ஒரே ஜூம் அழைப்பில் 800 பேரை பணி நீக்கம் செய்தது. அறிக்கைகளின் படி சுமார் மூன்று நிமிடங்களில் இந்த அறிவிப்பானது வந்துள்ளது. இது குறித்து இந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பணி நீக்கத்தின் அடிப்படையில் உங்கள் வேலை உடனடியாக நிறுத்தப்படுகிறது. இன்று உங்கள் வேலையின் இறுதி நாள் என்றும் கூறியுள்ளார்.

ஏன் இந்த பணி நீக்கம்

ஏன் இந்த பணி நீக்கம்

எனினும் ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும் இந்த அறிவிப்பானது சற்றே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இது ஊழியர்களுக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதே உயர் அதிகாரிகள் தரப்பில் மெயில் மற்றும் செய்தி மூலமாகவும் கூறப்பட்டது. இது நிறுவனம் 2 ஆண்டில் 200 மில்லியன் பவுண்டுகள் இழப்பினை கண்டுள்ளது. இதற்கிடையில் தான் 800 பேரை பணி நீக்கம் செய்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

After better.com this company lay off 800 employees over zoom call

After better.com this company lay off 800 employees over zoom call/மீண்டும் ஒரு ஜூம் காலில் பணி நீக்கம்.. பெட்டர்.காமை போல பி&ஓ ஃபெரிஸ்.. ஊழியர்கள் கண்ணீர்..!

Story first published: Sunday, March 20, 2022, 12:42 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.