உக்ரைனின் மரியுபோலில் 400 பொதுமக்கள் தங்கியிருந்த பாடசாலை ஒன்றின் மீது ரஸ்ய படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
அதேநேரம் கிழக்கு உக்ரேனிய நகரமான கிரெமின்னாவில் உள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தின் மீது ரஸ்ய தாங்கிப்படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இதன்போது 56 குடியிருப்பாளர்கள் கொல்லப்பட்டதாக தகவலள் வெளியாகியுள்ளன.
15பேர் வரை ரஸ்ய படையினரால் கடத்திச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் உக்ரைனில் இடம்பெற்று வரும் சண்டையில் ரஸ்யாவின் மூத்த கடற்படை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
எண்ட்ரே பாலி என்ற அதிகாரியே உக்ரைன் படைகளால் கொல்லப்பட்டார்,
அவர், ரஸ்யாவின் கருங்கடல் கடற்படையின் துணைத் தளபதி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.