ருச்சி சோயாவின் FPO.. சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு..!

சமையல் எண்ணெய் நிறுவனமான ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் ஃபாலோ ஆன் பப்ளிக் (FPO) மூலம் பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது.

அதெல்லாம் சரி அதென்ன ஃபாலோ ஆன் பப்ளிக்? எஃப்பிஓ என்பது ஏற்கனவே பங்கு சந்தையில் பங்குகளை வெளியிட்டுள்ள ஒரு நிறுவனம், கூடுதல் பங்குகளை மீண்டும் பொது மக்களுக்கு வெளியிடுவதாகும். இதனை தொடர் பங்கு வெளியீடு என்று கூறுவார்கள்.

அந்த வகையில் தற்போது ருச்சி சோயா நிறுவனம் அதன் தொடர் பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது.

பதஞ்சலி பிஸ்கட் நிறுவனம் விற்பனை.. ரூ.60 கோடிக்குக் கைப்பற்றும் ருச்சி சோயா..!

தொடர் பங்கு வெளியீடு

தொடர் பங்கு வெளியீடு

இது உண்மையில் முதலீட்டாளர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு என்றும் கூட கூறலாம். ஏனெனில் ருச்சி சோயா நிறுவனம் 4,300 கோடி ரூபாயை திரட்டும் வகையில், தொடர் பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. இது பிப்ரவரி 24ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 28 தேதி வரையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிள்ளது.

ஜூன் மாதமே விண்ணப்பம்

ஜூன் மாதமே விண்ணப்பம்

கடந்த ஜூன் மாதமே இந்த தொடர் பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் 25% பங்குகள், பொது பங்களாக இருக்க வேண்டும். ருச்சி நிறுவனத்தில் அத்தகைய விதிமுறையினை பூர்த்தி செய்யும் விதமாகத் தான் இந்த பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது.

கடனை அடைக்க திட்டம்
 

கடனை அடைக்க திட்டம்

மேலும் இந்த நிறுவனம் இந்த நிதி திரட்டல் மூலம் திரட்டப்படும் நிதியினை நிலுவையில் உள்ள கடனை அடைக்கவும், நடைமுறை மூலதன செலவினங்களுக்கும், அதன் கார்ப்பரேட் செலவினங்களுக்கும், மூலதன செலவினத்திற்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

செபி விதிமுறை

செபி விதிமுறை

கடந்த 2019ம் ஆண்டில் பதஞ்சலி நிறுவனம் ருச்சி நிறுவனத்தினை கையகப்படுத்திய நிலையில், அதன் புரோமோட்டர்கள் வசம் 99% பங்கானது இருந்தது. ஆக நிறுவனம் குறைந்தபட்சம் 9% பங்கினையானது விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. செபி விதிமுறை படி , புரோமோட்டார்களின் பங்கு விகிதம் 75% ஆகவும், பொது பங்கு தாரர்களின் பங்குகளை குறைந்தபட்சம் 25% ஆகவும் இருக்க வேண்டும். இது சுமார் 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு.

 பங்கு விலை நிர்ணயம்

பங்கு விலை நிர்ணயம்

இந்த நிறுவனத்தின் தொடர் வெளியீட்டின் விலை நிர்ணயமானது 615 – 650 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில் 21 பங்குகள் ஒரு லாட் ஆகும். ஆக வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் எனில் 21ன் மடங்கில் வாங்கிக் கொள்ளலாம். இதன் சந்தை மூலதனமானது. இது தற்போதைய சந்தை விலையில் இருந்து குறைந்த விலையில் கிடைப்பதால் மிக நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

தற்போதைய விலை நிலவரம்?

தற்போதைய விலை நிலவரம்?

ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த அமர்வில் NSE-யில் 6.25% குறைந்து, 1004.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 1376.70 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 629.15 ரூபாயாகும்.

இதே BSE-ல் 6.22% குறைந்து, 1004.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 1377 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 619 ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

ruchi soya fixed Rs.615 – 650 price band for its FPO

ruchi soya fixed Rs.615 – 650 price band for its FPO/ருச்சி சோயாவின் FPO.. சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு..!

Story first published: Sunday, March 20, 2022, 21:25 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.