இந்தியாவின் அந்நியச் செலாவணி (அந்நிய செலாவணி) கையிருப்பு மார்ச் 11 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 9.646 பில்லியன் டாலர் குறைந்து 622.275 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் இல்லாத கடுமையான சரிவாக உள்ளது.
ரூபாயின் மதிப்பு சரிவைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கையிருப்பில் இருக்கும் டாலரை அதிகமாக விற்றதனால் ஏற்பட்ட சரிவு தான் இது.
இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 75.95 ஆக உள்ளது.
மத்திய அரசால் தமிழ்நாட்டு அரசுக்கு 20,000 கோடி ரூபாய் இழப்பு..! #TNBudget2022
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியின் வாராந்திர புள்ளிவிவர அறிக்கையின் படி, அந்நிய செலாவணி கையிருப்பின் மிகப்பெரிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துக்கள் 11.108 பில்லியன் டாலராக குறைந்து 554.359 பில்லியன் டாலராக உள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
அமெரிக்க டாலர்
அமெரிக்க டாலர் அடிப்படையில் அந்நிய செலாவணி கையிருப்பின் அளவுகள் அறிவிக்கப்ப்டடாலும், அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ள யூரோ, இங்கிலாந்தின் பவுண்ட் ஸ்டெர்லிங் மற்றும் ஜப்பானிய யென் போன்ற டாலர் அல்லாத நாணயங்களும் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவுக்கு டாலர் அல்லாது பிற நாணயங்களின் வீழ்ச்சியும் அடங்கும்.
அந்நியச் செலாவணி
இந்தியாவின் அந்நியச் செலாவணி சொத்துக்களில் இந்த கூர்மையான சரிவு ஏற்பட, ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.02 ஆக சரிந்தது.
விற்பனை
ரூபாய் மதிப்பின் சரிவை தடுக்க ஆர்பிஐ தலையிட்டு டாலர் விற்பனை மூலம் கட்டுப்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி ஒரு நாளுக்கு 1 பில்லியன் டாலர் வரையில் டாலர் விற்பனை செய்து ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை குறைத்துள்ளது. இதனால் 77.02 ஆக இருந்த ரூபாய் மதிப்பு தற்போது 75.95 ஆக உள்ளது.
India’s forex reserves biggest drop in 2 years action aganist rupee fall
India’s forex reserves biggest drop in 2 years action aganist rupee fall ரூபாய் மதிப்பு சரிவு.. ஆர்பிஐ எடுத்த நடவடிக்கை.. 2 வருட சரிவில் அந்நியச் செலாவணி..!