லண்டன் பல்கலைக்கழக மண்டபத்திற்குள் மாணவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து 22 வயது இளைஞரை பொலிசார் அவசரமாக தேடி வருகின்றனர்.
குறித்த இளைஞர் தொடர்பில் பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்ட மாநகர பொலிசார், பொதுமக்களிடம் அவசர உதவி கோரியுள்ளனர்.
சனிக்கிழமை காலை சுமார் 5 மணியளவில் 19 வயதான இளம் பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் Maher Maaroufe என்பவர் மீது சந்தேகம் கொண்ட பொலிசார், தற்போது அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
குறித்த பல்கலைக்கழக மாணவி கொடூரமாக தாக்கப்பட்டு, சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட இளம் பெண் அருகில் உள்ள லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 180 மாணவர்கள் தங்கும் அந்த 6 மாடி கட்டிடத்தில் கொலை செய்யப்பட்ட மாணவி 5வது மாடியில் தங்கி வந்துள்ளார்.
மாணவி தாக்குதலுக்கு இலக்கான காரணம் தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருவாதாக கூறப்படுகிறது.
அதிகாலை 3 மணியளவில் மாணவி தங்கியிருந்த மாடியில் பலத்த சத்தம் கேட்டதாக சில மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த கொலை வழக்கு தொடர்பில் 22 வயதான Maher Maaroufe என்பவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.