வேலையின்மை இல்லாத நிலை உருவாக்கப்படும்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை அடுத்த வண்டலுரில் 500-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் வேலையின்மையே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என உறுதியளித்தார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் சென்னை அடுத்த வண்டலூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், 73ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும், அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பயிற்சி வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் துவக்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலை வாய்ப்பை பெற்றவர்கள் திறமைகளை வளர்த்து மேலும் முன்னேற வேண்டும் எனவும், வேலை கிடைக்காதவர்கள் சோர்ந்து விடாமல் திறன்களை வளர்த்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.