ஜோஹன்ஸ்பேர்க்,
வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று ஜோஹன்ஸ்பேர்க்கில் நடைபெற்று வருகிறது
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி கேப்டன் தமீம் இக்பால் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய வங்காளதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது .அந்த அணியில் அபிப் ஹொசைன் மட்டும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார் .இதனால் வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது . அதிகபட்சமாக அபிப் ஹொசைன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .
தென் ஆப்பிரிக்க அணியில் ரபடா சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் .
தொடர்ந்து 195 ரன்கள் என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது