உக்ரைனில் முதியோர் இல்லம் ஒன்றை டாங்கிகளால் தாக்கிய ரஷ்ய துருப்புகள் 56 முதியவர்களைக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 25 நாட்களை எட்டியுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் புடின் துருப்புகளின் கொடூரங்கள் அம்பலமாகி வருகிறது.
முதியோர் இல்லம் ஒன்றில் ரஷ்ய டாங்கி ஒன்று கொடூர தாக்குதலை முன்னெடுத்ததில், மொத்தம் 56 முதியவர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய துருப்புகளின் குறித்த நடவடிக்கை இழிவானது மட்டுமல்ல திட்டமிட்ட கொடூரம் என உக்ரைன் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் குட்டி நகரமான கிரெமின்னாவில் குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
குறித்த தாக்குதலில் தப்பிப்பிழைத்த சுமார் 15 பேர் ரஷ்ய துருப்புக்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது,
அவர்கள், விளாடிமிர் புடினுக்கு விசுவாசமான படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமான ஸ்வாடோவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய தாக்குதல் மார்ச் 11ம் திகதி நடந்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் உக்ரேனிய அதிகாரிகளால் அந்த முதியோர் இஅல்லம் பகுதியில் அணுக முடியாததால் தற்போது மட்டுமே அந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.