அக்ஷரா ஹாசனின் புதிய படம் நேரடியாக ஓடிடியில் வெளியிடு…!

அக்ஷரா ஹாசன்
கதாநாயகியாக நடித்துள்ள ‘
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
’ படத்தின்
ரிலீஸ்
குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.இயக்குனர்
S. ராமமூர்த்தி
இயக்கத்தில் தற்போது அக்ஷரா ஹாசன் புதிய படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. பிரபல பாடகி
உஷா உதுப்
இந்தப் படத்தில் அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடித்துள்ளளார். லும் இந்தப் படத்திற்காக அக்ஷரா கன்னட இசையைக் கற்று கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வரும் சமந்தா…! எதுக்கு தெரியுமா… ?

இப்படத்தை
Trend Loud
நிறுவனம் படம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு சுஷா என்பவர் இசையமைத்துள்ளார். ஸ்ரேயா தேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஒரு கட்டுக்கோப்பான குடும்பத்தில் பிறந்த அறிவுமிக்க ஒரு இளம்பெண் சமூகத்திற்காக குடும்பத்திற்காக தனது ஆசைகளை துறக்க முடியாமல் இரண்டையும் சமன்படுத்தி அப்பெண் வாழ முயல்வதே இப்படத்தின் கதை.

2020-ம் ஆண்டே இந்தப் படம் துவங்கப்பட்டது. தற்போது வரை படம் குறித்த அப்டேட் ஏதும் வெளியாகாமல் இருந்துவந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.இந்தப் படம் தியேட்டர் வெளியீட்டைத் தவிர்த்து நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

வரும் மார்ச் 25-ம் தேதி முதல் இந்தப் படம் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அக்ஷரா ஹாசன் கதாநாயகியாக அறிமுகமாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.