சென்னை:
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில் சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தெரிவித்தேன்.
மருத்துவர்களிடம் கலந்து பேசி, வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவெடுக்கலாம் என விஜயபாஸ்கர் கூறினார்.
ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், ஒரு வாரத்தில் குணமடைந்து விடுவார் எனவும் அப்பல்லோ டாக்டர் விஜயகுமார் ரெட்டி தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்தனர்
ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து செல்வது குறித்து ராம் மோகன் ராவ் தன்னிடம் எதுவும் பேசவில்லை.
அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை.
அரசியல் பிரபலங்களை உயர் சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வது தவறு இல்லை
தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து, துணை முதலமைச்சராக பொறுப்பேற்கும் வரை நான் அளித்த பேட்டியில் பேசியது அனைத்தும் சரியானதே என தெரிவித்தார்.
இந்நிலையில், நாளையும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகும்படி ஓ பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்…ம.தி.மு.க.வில் துரை வைகோவுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு