இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்படத் துவங்கியது முதல் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளித்தது. இதன் மூலம் பல கோடி இந்தியர்கள் வேலைவாய்ப்புகளை இழக்காமல் தொடர்ந்து மாத சம்பளம் பெற்று வந்தனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து நிறுவனங்கள் அலுவலகத்திற்கு அழைக்கத் துவங்கியுள்ள நிலையில் புதிய பிரச்சனை உருவாகியுள்ளது. இதனால் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கலாமா வேண்டாமா என்ற கேள்வி நிறுவனங்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ரஷ்யாவில் காண்டம் விற்பனை 170% உயர்வு.. என்ன காரணம்..!
முக்கியமான ஆய்வு
இந்தியாவில் தற்போது பல துறையில் திறமையான ஊழியர்களுக்கு அதிகளவிலான தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியான வேலைவாய்ப்பை உருவாக்கும் ஐடி துறையில் ஊழியர்களுக்குத் தட்டுப்பாடு சற்று கூடுதலாகவே உள்ளது. இந்தச் சூழ்நிலையில் முன்னணி HR நிறுவனம் ஒரு முக்கியமான ஆய்வை ஊழியர்கள் மத்தியில் செய்துள்ளது.
வேலை ராஜினாமா
ஆட்சேர்ப்பு மற்றும் பணியாளர் நிறுவனமான CIEL HR சர்வீசஸ் நடத்திய ஆய்வில், 10 ஊழியர்களில் குறைந்தது 6 பேராவது அலுவலகத்திற்குச் சென்று பணியாற்றுவதற்குப் பதிலாக ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகப் பதிலளித்துள்ளனர். இதேபோல் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக அதிகச் சம்பளம் கிடைக்கும் வேலைவாய்ப்புகளையும் மறுக்கத் தயாராக உள்ளதாக இந்த ஆய்வு முடிவுகள் கூறுகிறது.
WFH ஆதிக்கம்
இந்த ஆய்வு ஐடி, அவுட்சோர்சிங், டெக் ஸ்டார்ட்அப், கன்சல்டிங், BFSI போன்று டெக் சேவைகள் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் துறை ஊழியர்கள் மத்தியில் செய்யப்பட்டு உள்ளது. இந்திய ஊழியர்கள் மத்தியில் இந்தத் திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்பது தான் அனைத்துத் துறை நிறுவனங்கள் மத்தியில் முக்கியப் பிரச்சனையாக உள்ளது.
வொர்க் லைப் பேலென்ஸ்
வீட்டில் இருந்து பணியாற்றும் காரணத்தால் வொர்க் லைப் பேலென்ஸ் மிகவும் சிறப்பாக உள்ளது. இதேவேளையில் ஊழியர்களின் வேலை திறனிலும் எவ்விதமான பாதிப்பும் இல்லை, சொல்லப்போனால் பல ஊழியர்கள் அதிகப்படியான நேரம் வீட்டில் இருந்து பணியாற்றும் காரணத்தால் நிறுவனங்களும் வொர்க் ப்ரம் ஹோம் அளிப்பதை மறுக்க முடியில்லை.
2 திட்டங்கள்
இதனால் அனைத்து முன்னணி நிறுவனங்களும் திறன் வாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவில் தற்போது 2 திட்டங்களை ஊழியர்களுக்கு முன் வைத்துள்ளது. ‘absolute WFH’ மற்றும் ‘Flexi WFH’. இதை ப்ராஜெக்ட், கிளையின்ட், டிமாண்ட், வேலை கட்டமைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஊழியர்களுக்குத் தேர்வு செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
Indian Employees quit jobs instead of returning to office; New problem to IT sector
Indian Employees quit jobs instead of returning to office; New problem to IT sector ஆபீஸ்-க்கு வரனுமா.. எனக்கு வேலையே வேண்டாம்..! #WFH