சென்னை
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆஜராக உள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இந்த புகாரை முன்னாள் துணை முதல்வ்ர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் பலரும் தெரிவித்தனர். இதையொட்டி அப்போதைய முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்தார்.
இந்த ஆணையத்தின் விசார்னையை எதிர்த்து அப்போலோ மருத்துவமனை மேல்முறையீடு செய்ததால் விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டது. இந்த ஆணயைத்தின் ஆயுட்காலம் பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நில்லையில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதவ்ருமான ஓ பன்னீர் செல்வம் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்பிய பன்னீர்செல்வத்தின் விளக்கத்தை அறிய மக்கள் ஆவலுடன் உள்ளனர்.