புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா 3-ம் அலை முடிவுக்கு வந்ததை அடுத்து தினசரி பாதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.
இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,549 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 30 லட்சத்து 9 ஆயிரத்து 390 ஆக உயர்ந்தது.
பாதிப்பை போலவே கடந்த சில நாட்களாக தினசரி பலி எண்ணிக்கையும் சரிந்து வருகிறது. குறிப்பாக பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் எந்த உயிரிழப்பும் இல்லை.
கேரளாவிலும் புதிய உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. அதே நேரம் விடுபட்ட 24 மரணங்கள் சுகாதாரத்துறை பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதுதவிர கர்நாடகாவில் 2, டெல்லி மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அரியானா, மிசோரத்தில் தலா ஒருவர் என மேலும் 31 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,16,510 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 2,652 பேர் நலம் பெற்றுள்ளனர்.
இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 67 ஆயிரத்து 774 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 25,106 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 1,134 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் இதுவரை 181 கோடியே 24 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 2,97,285 டோஸ்கள் அடங்கும்.