இஸ்லாமாபாத்:“பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வரும் 25ல் ஓட்டெடுப்பு நடத்தப்படும்” என பாகிஸ்தான் பார்லி. சபாநாயகர் ஆசாத் கெய்சர் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாக்.கில் சமீபகாலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதையடுத்து இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ளன. இம்ரான் கானின் கட்சியை சேர்ந்த 25 எம்.பி.க்களும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் இம்ரான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு வரம் 25ல் பார்லியில் நடத்தப்பட உள்ளதாக சபாநாயகர் ஆசாத் கெய்சர் நேற்று அறிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:“பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வரும் 25ல் ஓட்டெடுப்பு நடத்தப்படும்” என பாகிஸ்தான் பார்லி. சபாநாயகர் ஆசாத்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.